#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
No caste சான்றிதழ் வழங்க மறுப்பு.. இயக்குனர் வெற்றிமாறனின் வேதனை..!
தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக பல வெற்றி படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களுமே இவருக்கு வெற்றிகளை வாரி குவித்தது.
தற்போது இவர் இயக்கி வரும் விடுதலை என்ற படத்தில் நடிகர் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக வெற்றிமரன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதை தவிர்க்க no caste என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வெற்றிமாறன் பேசியுள்ளார். அவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளி கல்லூரிகளில் சாதிச்சான்றிதழ் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். எனவே என் பிள்ளைகளுக்கு நோ காஸ்ட் சான்றிதழ் பெற முயற்சி செய்தேன். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால் அதே நேரத்தில் சமூக நீதி அடிப்படையில் ஒருவர் உரிமையை பெற வேண்டும் என்றால் அவர் ஜாதிச் சான்றிதழை பயன்படுத்துவது அவசியம்.
மேலும், சினிமாவில் நடிக்கும் நடிகர்களை அவர்கள் தலைவர்கள் என்று கூறும்போது சற்று வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் நடிக்கும் நட்சத்திரங்கள் மட்டும் தான் தலைவர்கள் இல்லை. முந்தைய காலங்களில் சில நடிகர்கள் அரசியலுடன் தொடர்பு இருந்ததால் அவர்களை தலைவர்கள் என்று அழைத்தார்கள். அது சரியாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை என்று வெற்றிமாறன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.