#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல வில்லனுடன் ஜோடி சேரும் நடிகை ரெஜினா! என்ன படம் தெரியுமா?
தமிழில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரெஜினா. பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவிற்குள் வந்திருந்தாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான் இவருக்கு தமிழில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து அதர்வா, உதயநிதி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை ரெஜினா.
இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமியுடன் ஒரு படத்தில் நடிக்க நடிகை ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகரான அரவிந்த்சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் மற்றும் போகன் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அரவிந்தசாமி நடிப்பில் இறுதியாக வெளியான படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்". அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள "நரகாசூரன்" படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் ராஜபாண்டி படத்தில் நடிகர் அரவிந்தசாமியை ஹீரோவாக ‘ கள்ளபார்ட்’ என்ற திரைப்படத்தில் வருகிறார்.
இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் நடத்து வருகிறார். இந்தப் படத்தை விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிஸ் ப்ரேம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் "கள்ளபார்ட்" படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் சாட் அமைத்து சுமார் 30 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.