படுத்த படுக்கை; தற்கொலை முயற்சி.! என் இந்த நிலைமைக்கு இதுதான் காரணம்! ரோபோ சங்கர் உடைத்த பகீர் உண்மை!!



Robo shankar talk about his health issue affect

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் முன்னேறி வெள்ளித்திரையில் காலடி பதித்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கியுள்ளார்.

இதற்கு முன்பே ரோபோ சங்கர் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். கட்டுமஸ்தான உடலமைப்புடன் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Robo shankar

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர்  ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் ஆரம்ப காலத்தில் அதிகமான கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தேன். இந்நிலையில் நான் உடலை குறைக்க டயட்டில் இருந்த போது மஞ்சட்காமாலை வந்து என்னை பாடய்படுத்தி விட்டது. ஐந்து மாதங்களாக படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன்.

ஆனால் அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியது எனது குடும்பம்தான். எனக்கு ரொம்பவே கோபம் வந்தது. வீட்டில் அதிகமா சண்டை போட்டுகொண்டே இருந்தேன். மருந்து மாத்திரை எடுக்க மாட்டேன். வீட்டில் நிம்மதியே இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். யாரும் தப்பான பழக்கங்களுக்கு அடிமையாகாதீங்க. உங்களுக்கு நானே உதாரணமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.