பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அன்றே விஜய் பற்றி நடிகர் திலகம் சிவாஜி சொன்ன வார்த்தை.! அட.. அப்படியே நடக்குது!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து அனைவரும் ரசிக்கும் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், இவரது பிறந்த நாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவைப் போல கொண்டாடுவர்.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று.#NadigarThilagam #SivajiGanesan pic.twitter.com/3Ola0Sw6wu
— S A Chandrasekhar (@Dir_SAC) July 21, 2022
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் விஜய்யை குறித்து பேசியதை இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,இந்த தம்பி விஜய் பின்னாடி சினிமாவில் பெரிய ரௌண்டு வருவார் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.