மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாலியல் தொல்லை, அடிச்சி துன்புறுத்துவாரு., 8 ஆண்டுகளும் நரகம் தான்" - உண்மையை உடைத்த பிரபல நடிகரின் முன்னாள் காதலி..!
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் சல்மான் கான், 57 வயதாகியபோதும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர் பெயரளவில் மட்டுமே முரட்டு சிங்கிள், மிற்றபடி பல நடிகைகளோடு காதல் & லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டார் என விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அவரது லிஸ்டில் இருப்பதாக கூறப்படும் பல காதலிகளில், நடிகை சோமி அலி இன்ஸ்டாகிராமில் பல பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அதில், "16 வயதில் நான் சல்மான் கானை காதலிக்க தொடங்கினேன். திருமணம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தேன்.
அவரோடு சில பாலிவுட் படங்களில் நடித்ததை தொடர்ந்து, நாங்கள் காதல் வயப்பட்டோம். தொடக்கத்தில் என்னை உயிருக்கு உயிராக காதலித்தவர் அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் தொல்லை, நண்பர்கள் முன்பு அவதூறாக திட்டுவது என இருந்தார். நாங்கள் இணைந்திருந்த 8 ஆண்டுகளும் நரகமாக இருந்தன" என தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறை மற்றும் பலாத்காரத்திற்கு எதிராக, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சோமி அலி நடத்தி வரும் நிலையில், ஆணாதிக்கத்திற்கு எதிராக எனது கருத்தை பதிவு செய்கிறேன் என தனது முன்னாள் காதலரான சல்மான் கான் குறித்தும், அவரால் அனுபவித்த சித்ரவதை குறித்தும் நடிகை தெரிவித்துள்ளார். இந்த பதிவை இடுகையிட்ட சிலமணிநேரத்திலேயே அதனை டெலீட் செய்துவிட்டார் என்பது பதிவு செய்யட்டத்தக்கது.