96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது".. சட்டை பட்டனை கழட்டியபடி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் சல்மான்கான்.?
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான்கான். 'மைனோ பியார் கியா' என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானார் சல்மான்கான். இவர் திரைத்துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரண்டு தேசிய விருதுகள், லிம் பேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.
இவ்வாறு பல இந்தி திரைப்படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் சல்மான் கான். மேலும், சல்மான்கான் பிக் பாஸ் என்ற இந்தி ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதன்படி,சர்ச்சைக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவரின் பல செயல்கள் சர்ச்சையிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நிலையில் சமீபத்தில் சல்மான் கான் பத்திரிகையாளர்களிடம் பேசிய செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதன்படி சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சல்மான்கானிடம் கேட்டனர். அதற்கு அவர், "பெண்களின் உடல் விலை மதிப்பற்றது. அவர்கள் எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது. ஆண்கள் பெண்களை பார்வை சரியில்லை. அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.