மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ... சினிமாவிலிருந்து விலகுகிறா நடிகை சமந்தா... வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் விஜய், விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்த நிலையில் மீண்டும் அதே நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் தென்கொரியா நாட்டிற்குச் சென்று சமந்தா சிகிச்சை பெற்றுள்ளார்.
இதன் காரணமாக தற்போது சமந்தா படங்களில் நடிக்க போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கேட்டு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.