ராதாரவியை பார்த்து பரிதாபத்தோடு சமந்தா இப்படி சொல்லிட்டாரே!! ஷாக் ஆன ரசிகர்கள்



samantha-tweet-against-radharavi

கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட ராதாரவி, நயன்தாராவை இழிவாக பேசினார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் ராதாரவிக்கு  பல திரைபிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

samantha

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரபல நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அய்யோ பாவம், மிஸ்டர். ராதாரவி தான் செய்தது சரி என்பதை நிரூபிக்க போராடுகிறார். உங்களை பார்த்தா எனக்கு பாவமாக இருக்குது. உங்களின் ஆன்மா அல்லது அது எதுவாக இருந்தாலும் அமைதியைத் தேட வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் உங்களுக்கு நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு  பார்த்து இளைப்பாறுங்கள் ’ என்று  ராதாரவியை கிண்டலடித்து தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.