மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாமுராய் நாயகி அனிதாவை யாபகம் இருக்கா! அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. அதனை தொடர்ந்து அவர் விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனிதா ஹசானந்தனி கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அவரும் சின்னத்திரையை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு கர்ப்பமடைந்தார். அதனை யாரிடமும் சொல்லாமல் இருந்த அவர் திடீரென தனது புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அம்மாவான அனிதாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.