திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானத்தின் கிக் திரைப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு.. வயிறுகுலுங்க சிரிக்க தயாரா மக்களே?.!
நடிகர்கள் சந்தானம், மன்சூர் அலி கான், செந்தில், பிரசாந்த் ராஜ், கோவை சரளா, மனோபாலா, தன்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கிக்.
இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
படத்தை தணிக்கைக்குழுவின் பார்வைக்கு படக்குழு அனுப்பி வைத்திருந்த நிலையில், படத்திற்கு UA தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் மூலமாக காமெடி, ஆக்சன் கொண்டாட்டம் என பட களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.