திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானம் அடுத்ததாக நடிக்கபோகும் திரைப்படம்.. வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
விஜய் டிவியின் "லொள்ளு சபா" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். 2004ம் ஆண்டு "மன்மதன்" படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சிவா மனசுல சக்தி, பொல்லாதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்த சந்தானம், 2008ஆம் ஆண்டு "அறை எண் 305ல் கடவுள்" படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ஹேண்ட்மேட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.
இவர் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, டி டி ரிட்டர்ன்ஸ், கிக் ஆகிய படங்கள் ஓரளவு கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில், கல்யாண் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். அப்படத்திற்கு "80s பில்டப்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் சந்தானத்திற்கு ஜோடியாக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். மேலும் மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.