#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ஆத்மிகாவை கேலி செய்த நடிகர் சந்தீப் ; ஹோட்டலில் ஆர்ப்பாட்டம்
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் நரேனே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தீப் கிஷன், படப்பிடிப்பின் போது நடிகை ஆத்மிகாவை கிண்டல் செய்துகொண்டே இருந்ததாக அவர் கூறினார்.
படப்பிடிப்பின் போது நானும் இந்திரஜித்தும் சேர்ந்து நடிகை ஆத்மிகாவை கேலி செய்து கொண்டே இருந்தோம். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக கிளப்பிவிட்டோம். அதை நம்பி பயந்துபோன அவர், ஓட்டல் ஊழியர்களை எல்லாம் வரவழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார், என்று கூறினார்.