மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸால் கைவிடப்பட்ட சரவணனுக்கு, இப்படியொரு பதவியா!! அரசின் அறிவிப்பால் செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டவர் நடிகர் சரவணன். அவர் சிறுவயதில் தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி அவர் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆனபிறகு இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.
இதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்த நிலையில், சரவணனுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு அவருக்கு கவுரவ பதவி ஒன்றை அளித்துள்ளது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் தமழக அரசு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியமாக தலா ரூ. 7 லட்சம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குறைவான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களை தேர்ந்தடுக்கும் குழுவில் ஒரு உறுப்பினராக சரவணன் அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.