மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் பைனலில் கலந்து கொள்ளாதது ஏன்? முதன் முறையாக ஆவேசத்துடன் சித்தப்பு சரவணன் கூறியதை பார்த்தீர்களா!!
oபிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பருத்திவீரன் சித்தப்பு சரவணன். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வெளிப்படையாக இருந்துவந்தார். மேலும் கவின், சாண்டி ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் கமலிடம் பேசுகையில் தானும் பேருந்தில் பெண்களை உரசியுள்ளதாக கூறினார். அது பெரும் சர்ச்சையை கிளப்பி கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மன்னிப்பும் கேட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எவ்வித காரணமுமின்றி இரவோடு இரவாக சரவணனை வீட்டை விட்டு வெளியேற்றியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பிக்பாஸ் குறித்து மிகவும் ஆவேசமாக பல பேட்டிகளில் சரவணன் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற இறுதிப்போட்டியில் சரவணன் கலந்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் பங்கு பெறவில்லை. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பிக்பாஸ் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாதது எனக்கு பெரிய விஷயமே இல்லை. பிக்பாஸ் தாண்டி எனது வாழ்க்கையில் நிறைய உள்ளது. பிக்பாஸ் குறித்து எங்கும் எதுவும் பேசக்கூடாது என உறுதியாக உள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் அவர் தான் தற்போது மருத படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும், கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் எனவும் கூறியுள்ளார். மேலும் அதில் நான் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்கிறோம் என்றும் சரவணன் கூறியுள்ளார்.மருத படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். நான் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்கிறோம்.