மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் செக்க சிவந்த வானம்; சாதனை படைத்த டிரெய்லர்
செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் கடந்த வெள்ளிக்கிழமை லைக்கா ப்ரொடெக்சன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
பல்வேறு முன்னணி நடிகர்களை கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
எப்போதும் போல ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்தினத்தின் கூட்டணியில் இணைந்து இந்தபடத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியாகிய மூன்றே நாளில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது மேலும், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.