சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
குட் நியூஸ்: 9 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த பரிசு... தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா... குவியும் வாழ்த்துகள்!!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் முதல் சீசனில் சரவணன் மீனாட்சி என்ற ஆல் டைம் ஃபேவரட் சீரியலில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா ஜோடிகள். முதல் சீரியலிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் சீரியலில் நடிக்காமல் இருந்த ஸ்ரீஜா பின்னர் கணவர் செந்திலுடன் சேர்ந்து மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு சில காலம் காணாமல் போன ஜோடிகள் சமீபத்தில் தான் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக செய்தியை செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர் வெளியிட்டனர்.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்செய்தியை கேட்ட பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.