மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் நடிக்காமல் விட்ட படம்! ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை! எந்த படம் தெரியுமா?
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிக்கும் அணைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைக்கின்றது. சர்க்கார் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
விஜய்யின் சினிமா பயணத்தில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களும் உண்டு, தோல்வி படங்களும் உண்டு. அதேபோல விஜய் நடிக்காமல் போய் மாபெரும் வெற்றிபெற்ற படங்களும் உள்ளன.
அதில் ஒன்றுதான் இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம். ஆட்டோகிராப் படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கமுடியாமல் போனது. இந்நிலையில் ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு இதே தேதி (பிப்ரவரி 19) வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் கடந்துவிட்டன.
இந்நிலையில் இதை நினைவுகூரும் வகையில் படத்தின் இயக்குனர் சேரன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று ஆட்டோகிராப் வெளியானநாள். மிகுந்த போட்டிகளுக்கு நடுவே நல்ல திரையரங்கே கிடைக்காமல் கிடைத்த திரையரங்கில் வெளியிட்டே ஆகவேண்டிய சூழல்.. ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில் துணிந்து வெளியிட்டோம். கொண்டாடினார்கள் திரைப்படத்தை 175 நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. நன்றி . என்று தெரிவித்துள்ளார்.
Feb 19.. இன்று ஆட்டோகிராப் வெளியானநாள். மிகுந்த போட்டிகளுக்கு நடுவே நல்ல திரையரங்கே கிடைக்காமல் கிடைத்த திரையரங்கில் வெளியிட்டே ஆகவேண்டிய சூழல்.. ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில் துணிந்து வெளியிட்டோம். கொண்டாடினார்கள் திரைப்படத்தை 175 நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. நன்றி pic.twitter.com/xz36K99pOG
— Cheran Pandian (@cherandreams) February 19, 2019