திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவர் அர்னவ் அடித்து உதைத்தார்.! கருக்கலையும் நிலையில் பிரபல நடிகை கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ!!
சன் தொலைக்காட்சியில் கேளடி கண்மணி, மகராசி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா. அவர் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாம். இந்த நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்ற திவ்யா செல்லம்மா தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அர்னவ்வை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அண்மையில் நடிகை திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திவ்யா கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர் உதைத்ததில் தனக்கு கர்ப்பம் கலையும் அபாயம் இருப்பதாகவும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், அர்னவும் நானும்
2017ஆம் ஆண்டு ஒரே சீரியலில் நடித்தோம். அப்பொழுது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். பின்னரே நான் வற்புறுத்தியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் எங்களுக்கு திருமணமானதை வெளியே கூற வேண்டாம் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அர்னவ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக என்னிடம் பலரும் சொன்னார்கள். அதன் பிறகு நான் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டேன். ஆனால் அதனை நீக்க சொல்லி அவர் என்னை வற்புறுத்தினார்.
பின் சமீபத்தில் நான் கர்ப்பமானதையும் பதிவிட்டேன். அதன் பிறகே என்னை ரொம்ப டார்ச்சர் செய்ய ஆரம்பிச்சாங்க. என் கணவர் அர்னவ் என்னை அடித்ததில் எனக்கு வயிற்றில் அடிபட்டது. அவர் காலால் மிதித்ததில் மயக்கமடைந்துவிட்டேன். பின் மயக்கம் தெளிந்து கண்விழித்துப் பார்த்தபோது அர்னவ் அங்கே இல்லை. அதன் பிறகே வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக திவ்யா கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் அவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் எனது கருக்கலையலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் திவ்யா வீடியோவில் தெரிவித்துள்ளார்.