மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் பிறந்தநாளன்றே குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழில் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்து பரிச்சயமானவர்தான் நடிகை காயத்ரி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது நடனத்தால் மக்களிடையே பிரபலமான அவர் பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கி தென்றல், சரவணன் மீனாட்சி, தாமரை, அழகி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை காயத்ரி இறுதியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நடித்து வந்தார். நடிகை காயத்ரி நடன கலைஞர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தருண் என்ற 13 வயது மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை காயத்ரி இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்தார்.
தனது கர்ப்பகால புகைப்படங்கள், வீடியோக்களை அவர் பகிர்ந்து வந்தார். தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. காயத்ரியின் பிறந்த நாளன்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.