பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை காயத்ரி வீட்டில் கோலாகலமாக நடந்த விசேஷம்.! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா! வைரல் புகைப்படங்கள்!!
தமிழில் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் நடிகை காயத்ரி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது அசத்தலான நடனத்தால் மக்கள் மத்தியில் பிரபலமான அவர் பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கி தென்றல், சரவணன் மீனாட்சி, தாமரை, அழகி மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை காயத்ரி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நடித்து வந்தார். நடிகை காயத்ரி நடன கலைஞர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தருண் என்ற 12 வயது மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை காயத்ரி தற்போது தனது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார்.
மேலும் அதனால் அவர் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து விலகியுள்ளார். அண்மையில் காயத்ரிக்கு வளைகாப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.