#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. கண்ணம்மாவா இது! மாடர்ன் உடையில் சும்மா வேற லெவலில் ஜொலிக்கிறாரே! கிறங்கிய ரசிகர்கள்!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இத்தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி. இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர்.
பாரதிகண்ணம்மா தொடரில் மிகவும் அமைதியான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவரும் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் இத்தொடர் டிஆர்பியையும் எகிற வைக்கிறது.
சீரியல், மாடலிங் என செம பிஸியாக இருக்கும் ரோஷினி சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்க கூடியவர். அவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைப்பார். இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் வைரமாய் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.