#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதற்காகத்தான் அந்த இயக்குனரை பார்த்து பயந்து நடுங்கினேன்.! பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி!
தமிழில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சான்ட்ரா ஏமி.
இவர் காற்றின் மொழி படத்தில் தொகுப்பாளினியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கும் வர்மா படத்தில் தேவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாலாவின் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சான்ட்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். அனைத்து நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். நான் படத்தில் நடிக்க தேர்வானேன்.
இந்நிலையில் பாலா மிரட்டுவார் என்று என்னிடம் சிலர் கூறியிருந்தார்கள். அதனால் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாகவும், பயமாகவும் இருந்தது.
ஆனால் பாலா அவ்வாறு இல்லை. சரியாக நடிக்கவில்லை என்றாலோ, வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார்.
ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். என்று கூறியுள்ளார்.