ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மருத்துவமனையில் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியல் நடிகை -புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில், நாயகியாக நடித்தவர் சரண்யா. நியூஸ் ஆங்கராக தன் கரியரைத் தொடங்கிய சரண்யாவுக்கு, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.
இந்த சீரியல் தற்போது, முடிவடைந்துள்ள நிலையில், சரண்யாவை 'மிஸ் பண்ணுவதாக' பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் மீண்டும் தமிழில் ரன் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆனால் தற்போது நடிகை சரண்யா சில நாட்களுக்கு முன்பு வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சரண்யாவுக்கு என்ன ஆயிற்று என புலம்பி வருகின்றனர்.