மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு நடந்த மோசமான கொடூரம்! பார்ப்போரை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!
பிரித்தானியாவில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து செல்வதைக் கண்டு, நபர் ஒருவர் அவரை மெதுவாக தொடர்ந்து சென்று அந்த சிறுமியிடம் எல்லைமீறி மோசமாக நடந்துகொண்ட சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் சலிஸ்புரி என்ற நகரில் அமைந்துள்ளளது சர்ச்சில் பூங்கா. அங்கு இருக்கும் சாலை ஒன்றில் கடந்த சில காலங்களுக்கு முன் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அந்த சாலையின் அருகே அடிக்கடி வாகனங்கள் வந்து, சென்றுகொண்டிருக்கும் பரபரப்பான சாலையும் உள்ளது.
இந்நிலையில் சிறுமி தனியாக நடந்து செல்வதை கண்டு கருப்பு நிற உடை அணிந்த நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து செல்கிறார். பின்னர் வேகமாக ஓடிச்சென்று அந்த சிறுமியை பிடித்து வற்புறுத்தி அத்துமீறியுள்ளார். அப்பொழுது அந்த சாலையில் நபர் ஒருவர் சைக்கிளில் வருவதை கண்ட அந்த கொடூரன் சிறுமியை விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் மெதுவாக அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள போலீசார், அந்த நபர் குறித்த தகவல் தெரிந்தாலோ, அவரை கண்டாலோ போலீசாரிடம் தெரிவிக்கும்படி உதவி கோரியுள்ளனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது.