#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'பப்ளிக் ப்ராப்பர்ட்டி' - பயில்வான் ரங்கநாதன் கமெண்ட்! காரசாரமான ஷகிலா!
தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. இவரது திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பட வசூலில் சாதனை புரிந்து வந்தன. தற்போது சினிமா உலகில் இருந்து விலகி இருக்கும் இவர் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பல்வேறு நடிகைகள் மற்றும் திரைத்துறை பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். தி கான்ட்ரோவர்சியல் ஷோ என அந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து அவரது யூடியூப் சேனலில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சினிமாவின் நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் தங்களது வாழ்வில் சொல்ல முடியாத சர்ச்சைக்குரிய விஷயங்களை அந்த நிகழ்ச்சிகளின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு சமீபத்தில் விருந்தினராக வந்திருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் யூடியூப் சேனல்களுக்கு தமிழ் சினிமாவின் நடிகர், நடிகைகளை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறி வருபவர். அதனால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளானார். இவர் நடிகை சகிலாவின் கான்ட்ரவர்ஷியல் சோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கலந்துரையாடல் காரசாரமான வாக்குவாதமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் ஆடை அணியும் விதம் ஆகியவற்றைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களை கூறி வருவதைப் பற்றிய கேள்விக்கு அவர்கள் அதுபோன்ற கருத்துக்கள் வரவேண்டும் என்றுதான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என பயில்வான் ரங்கநாதன் பதிலளித்தார் . இதற்கு குறுக்கிட்டு பேசிய ஷகிலா அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் பொதுவாழ்விற்கு வந்து விட்டால் பப்ளிக் ப்ராப்பரிட்டி தான் என ஏளனமாக பதில் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த வீடியோ யூடியூபில் வைரலாகியுள்ளது.