மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. குக் வித் கோமாளி ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா! செம ஷாக்கில் ரசிகர்கள்! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் 3வது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதில் 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஸ்ருதிகா. இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஆல்பம், தித்திக்குதே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் அவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிகா அண்மையில் தனது மகனுடன் ஆட்டோவில் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. அதைக் கண்ட ரசிகர்கள் சின்னப்பிள்ளை போல இருக்கும் ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.