மார்க் ஆன்டனி படத்தில் சில்க் ஸ்மிதா நடிக்கிறாரா.? ரசிகர்கள் ஆச்சர்யம்.!



Silk smitha in mark Antony movie

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள படம்  'மார்க் ஆன்டனி'. இப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Silk

இப்படம், ஒரு டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்நிலையில் 'மார்க் ஆன்டனி' படத்தின் ட்ரைலரில், ஒரு காட்சியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தோன்றியது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 'இது எப்படி?' என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

Silk

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மாடலான விஷ்ணுபிரியா காந்தி தான், இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக தோன்றியிருப்பதாகவும். அவரது முகத்தை வி எப் எக்ஸ் காட்சிகள் மூலமே சில்க் ஸ்மிதாவாக மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.