மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
' அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு தான் ' ரஜினி கதை கேட்டு சிம்பு ஒகே சொன்ன படம்..? சிலம்பரசனின் ரசிகர்கள் பெருமிதம்!!!
கோலிவுட் திரையுலகில் 80 வயது முதல் நடிகர்களாக இருந்தவர்கள் ரஜினி மற்றும் கமல். அந்த தேதி தொடங்கி இப்போதுவரை இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் வெற்றி கொடி கட்டி பறக்கின்றனர். அன்று தொடங்கி இன்று வரை இவர்களின் ரசிகர் கூட்டம் விரிவடைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ் சினிமாவின் இந்த இரு முக்கிய நட்சத்திரங்களும் நண்பர்களைப் போல வெளியே காட்டிக்கொண்டாலும் சினிமா துறைரீதியான போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. இதன்படி, லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் தற்போது வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர்ஹிட்டாக ஓடியது. இந்த வெற்றியை விக்ரம் படக்குழுவினர் கொண்டாடிவந்தனர்.
இதே நிலையில், இதுவரை சூப்பர் ஸ்டார் நடித்த புதுவிதமான கதைகளத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஜெய்லர் திரைப்படம் விக்ரம் படத்திற்கு போட்டியாக வெளிவர தயாராக உள்ளது. இந்த ஜெய்லர் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ரஜினியே திரைக்கதையில் கவனம் செலுத்தி நடித்து வருகிறாராம்.
இதுபோன்ற நிலையில், தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அடுத்தபடம் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து செய்யாறு பாலு ஒரு பேட்டியில், முதலில் தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் இந்த கதையை கூறி அவர் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இது தெரிந்தே கமல் இந்த கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று கூறினார். மேலும் ரஜினிக்கடுத்து சிம்புவை இந்த கதையில் நடிக்க வைத்த காரணத்தினால் அடுத்த சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் தான் என்று சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.