மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென மீண்டும் உடல் எடை அதிகரித்த நடிகர் சிம்பு.! இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் அசத்தலாக நடித்து சிறுவயதிலேயே அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்து அவர் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இறுதியாக சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது கைவசம் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்கள் உள்ளன. வெந்து தணிந்தது காடு படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.
அதனை தொடர்ந்து சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இது கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக். உடல் எடை நன்கு குறைந்து செம ஸ்லிம்மாக இருந்த சிம்பு தற்போது பத்துதல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளாராம். இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.