மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ்.. உங்க பிள்ளைகளிடம் பேசுங்க.! பெற்றோர்களுக்கு பாடகி சின்மயி வைத்த வேண்டுகோள்!!
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சின்மயி சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அடிக்கடி சர்ச்சையில் சிக்ககூடியவர்.
இந்நிலையில் அவர் தற்போது சென்னையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தபட்டது குறித்து தனது டுவிட்டரில் பகிர்ந்து பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது சென்னை அசோக் நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை உடன் படிக்கும் நான்கு சகமாணவர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மாணவனின் பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். வெளியே கூறினால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்தச் சிறுவன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் பாடகி சின்மயி, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள். பள்ளிகளில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என விசாரியுங்கள். அவர்களது நடத்தையில் மாற்றம் இருக்கிறதா? அவர்கள் பயந்து காணப்படுகிறார்களா? என்பதை நன்கு கவனியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.