சுதந்திரதின விழாவை முன்னிட்டு சின்னக்குயில் சித்ரா பகிர்ந்த பாடல்! வைரல் வீடியோ!



singer-chitra-shared-video-for-independence-day

இந்திய நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பாடகி சித்ரா அவர்கள் தேசபக்தியோடு தான் பாடிய பாடலை தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா அவர்கள் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் சின்னக்குயில் என புகழப்படும் சித்ரா அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாகவி பாரதியாரின் வரியில்
"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு"...  என்ற பாடலை தனது இனிய குரலில் பாடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் தேசபக்தியை அதிகரிக்கும் வகையில்  அந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.