#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லதா மங்கேஷ்கருக்காக சிவாஜி கட்டிய சிறிய பங்களா.! என்ன காரணம் தெரியுமா.?
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பானது.
லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டில் தான் தங்குவாராம். இதற்காக சிவாஜி தனது வீட்டின் ஒரு பகுதியில் லதா மங்கேஷ்கருக்காக ஒரு குட்டி பங்களா ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளாராம். அந்த பங்களாவை இரண்டே மாதத்தில் கட்டினாராம் சிவாஜி. தன் உடன் பிறந்த சகோதரி போலவே பார்த்துக் கொள்வாராம் சிவாஜி.
லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது என்பதால் சிவாஜியின் மனைவி தான் அவருக்கு சமைத்துக் கொடுப்பார் என பிரபு தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரும் தீபாவளி பண்டிகைக்கு சிவாஜி குடும்பத்தினருக்கு துணிகளும், பரிசுகளும் அனுப்புவாராம். சிவாஜி தன்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதை நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன் என பலமுறை லதா மங்கேஷ்கர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.