மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஓவர் ஆக்ட் பண்ண உதை படுவ!" வடிவேலுவை எச்சரித்த சிவாஜி கணேசன்!
1992ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "தேவர் மகன்". இப்படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க, உடன் சிவாஜி கணேசன் கமலஹாசனின் தந்தையாக நடித்திருந்தார். மேலும் ரேவதி, கௌதமி, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வரும் இப்படத்தில் வடிவேலு வழக்கமான காமெடி கேரக்டராக இல்லாமல் மாறுபட்ட குணச்சித்திர கேரக்டரில் நடித்திருப்பார். இதுகுறித்து ஒரு பேட்டியில் வடிவேலு கூறியதாவது, "தேவர் மகன் படத்தில் சிவாஜி சார் இறந்து விடுவார்.
அந்தக் காட்சியில் சிவாஜி சார் பக்கத்தில் குழந்தைகளும், அவரது கால் மாட்டில் நானும், சங்கிலி முருகனும் இருப்போம். அந்தக் காட்சியில் எல்லோரும் அழவேண்டும். அழுவது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று என்னிடம் கூறினர். நானும் "ஐயோ ஐயா போய்ட்டீங்களே!" என்று கத்தி அழ ஆரம்பித்தேன்.
அப்போது பிணமாக நடித்த சிவாஜி சார் எழுந்து என்னை அருகில் அழைத்து, 'நீ ஒருத்தன் அழுதா போதுமாடா? மத்த யாரும் அழ வேண்டாமா? நீ கத்துற கத்துல உன் உசுரே போய்ட போகுது. ஒழுங்கா கமுக்கமா அழு. ஓவர் ஆக்ட் பண்ணா உதை படுவ' என்று கூறினார்" என்று வடிவேலு கூறி சிரித்தார்.