மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சு! ஏன் இப்படி ஆகிட்டாரு!! புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கி தனது திறமையால், உழைப்பால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் உடல் எடை குறைந்து சிவகார்த்திகேயன் எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். அதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதால் இவ்வாறு உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.