53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள முதல் படம்! எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தங்களது சொந்த முயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவின் மிக பெரிய இடத்திற்கு வந்தவர்கள். இவர்கள் இருவர்க்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தல அஜித் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. இந்நிலையில் தல அஜித்துடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்துள்ளாராம். அது சம்மந்தமான புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல அஜித்தின் பேவரைட் போட்டோகிராபர் சிற்றரசு சமீபத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏகன் படத்துல இரண்டு பேருக்கும் ஒரு காட்சி இருந்ததாகவும், ஆனால் அந்த படத்தில் குறித்த காட்சி நீக்கப்பட்டதாகவும் சிற்றரசு தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரது வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர்.