மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உதயநிதி இனி திரைப்படத்தில் நடிக்காமல் போனது நல்லது தான்" சிவகார்த்திகேயனின் சர்ச்சையான பேச்சு..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதன் பின்பு இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா,கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், கண்ணே கலைமானே, நிமிர், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் திரையில் வெளிவரவிருக்கிறது. சமீபத்தில் நடந்த இசைவெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுபட இருப்பதால் இனி படங்கள் நடிக்க போவதில்லை. இவரின் இறுதி படம் 'மாமன்னன்' என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், "உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் என்பதை குறிப்பிட்டு இனி உதயநிதி சினிமாவில் நடிக்காமல் இருப்பதே நல்லது. அவர் நடிக்கவிருக்கும் படங்களின் வாய்ப்பு எங்களை போன்ற மற்ற நடிகர்களுக்கு கிடைக்கும் என்று காமெடியாக பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.