மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயா காப்பாத்துங்க.. முதல்வரான ஸ்டாலினுக்கு பிரபல முன்னணி நடிகர் விடுத்த வேண்டுகோள்! வைரலாகும் வீடியோ!!
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமாரும் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 19 வருடங்கள் அவர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். 1996ல் திமுக 172 இடங்களைப் பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் மறைந்ததற்குப்பின் 125 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது ஸ்டாலின் செய்த இமாலய சாதனை.அதேபோல உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என நிரூபித்துவிட்டார்.
முதலமைச்சர் அவர்களுக்கு எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும், மருந்துக் கடைகளிலும் காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா வென்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க.
இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நடிகர் சிவகுமார் அவர்களின் வாழ்த்து. @mkstalin #sivakumar#MKStalin pic.twitter.com/AJZ6Zz9Tz7
— Diamond Babu (@idiamondbabu) May 7, 2021
ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் படிப்பவர்கள் கட்டாயம் தங்களது தாய் மொழிகளைப் படித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இருக்கிறது. தமிழ் மொழியில பட்ட படிப்பு படிச்சவங்களுக்கு இங்க நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும்.
ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல்சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள் என கூறியுள்ளார்.