திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இது செம காம்போவா இருக்கே... உலக நாயகனுக்கு வில்லனாகும் எஸ்ஜே சூர்யா.!
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ் என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தவர்.
1995 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வந்தார் ஷங்கர்.
லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் பிரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் எஸ்ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் இதனை ஒரு பேட்டியில் அவரே உறுதியும் செய்திருக்கிறார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே எஸ்ஜே.சூர்யா வில்லனாக நடித்த மெர்சல் மற்றும் மாநாடு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.