மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் எப்போதும் சூப்பர் ஸ்டார்.. புகழ்ந்து தள்ளிய சினேகா.!
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, விஜய் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார். என்னோட வீட்ல எல்லாருக்கும் அவரை பிடிக்கும். அவர் எப்படி எல்லாரையும் அட்ராக்ட் பண்றாருன்னு தெரியல. அவருடைய நடிப்பு, டான்ஸ் என எல்லாமே நன்றாக இருக்கும். ரொம்ப அமைதியான மனிதர். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவ்வளவு க்யூட்டான விஷயங்கள் செய்து கொண்டிருப்பார் என கூறியுள்ளார்.