மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
எஸ்.பி.பி.யின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? அவரது மகன் எஸ்.பி.சரண் வெளியிட்ட முக்கிய தகவல்.!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், மயக்க நிலையிலிருந்து 90% மீண்டுவிட்டார் எனவும் அவரது மகன் எஸ்.பி.சரண் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தநிலையில் கடந்த 14 ஆம் தேதி முதல் உடல்நிலை கவலைக்கிடமானது.
அதன்பிறகு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. மயக்க நிலையிலிருந்து 90% மீண்டுவிட்டார். மருத்துவருக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறார்." என தெரிவித்துள்ளார்.