மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதைப் பொருள் பயன்படுத்தும் டாப் நடிகர், நடிகைகளின் பெயர்களை வெளியிட தயார்! ஆனால்.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீ ரெட்டி!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாகவே போலீசார்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாலிவுட் நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, கன்னட திரையுலகை சேர்ந்த ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில், பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாரிசு நடிகர்கள் கலந்துகொள்ளும் நடன விருந்துகளிலும் போதை பொருள் புழக்கம் உள்ளது. மேலும் பல ஒழுக்க கேடான செயல்களும் நடைபெறுகிறது. சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும். தெலுங்கானா அரசு எனக்கு பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.