மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப வலிக்குது.! கையில் பலத்த காயத்துடன் சூர்யா பட இயக்குனர்.! என்னாச்சு? புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்திற்காக சுதா கொங்கரா சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, சூர்யா சிறந்த நடிகருக்கான விருது மற்றும் அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதை பெற்றனர். இந்த நிலையில் இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. இதனை சுதா கொங்கராவே இயக்கி வருகிறார்.
மேலும் இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவிற்கு சிறு விபத்து ஏற்பட்டு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதிக வலி, அதிக எரிச்சல். ஒரு மாதம் படப்பிடிப்பிற்கு பிரேக் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023