பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. சோகத்தில் ரசிகர்கள்.!
தற்போதைய காலகட்டத்தில் சீரியல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய சுந்தரி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கன்னட மொழி தொடரான சுந்தரி என்ற தொடரின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் கேப்ரியெல்லா செல்லஸ், ஜிஷ்ணு மேனன் மற்றும் ஸ்ரீ கோபிகா நீலநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வரும் நிலையில் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் சுந்தரி சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.