மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி..! விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர் மீது குற்றச்சாட்டு.!? ரசிகர்கள் அதிர்ச்சி..?
பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் செவ்வந்தி. இந்த சீரியலில் திவ்யா ஸ்ரீதர் என்ற நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கன்னட நடிகையான இவர் 2009ஆம் வருடம் வெளிவந்த ஆ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் நடித்த கன்னட மொழி திரைபடங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதனால் தமிழில் தன் கவனத்தை திருப்பிய திவ்யா ஸ்ரீதர், படவாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். மகராசி, கேளடி கண்மனி போன்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் நடித்த சகநடிகரான அர்னாவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இத்தகைய நிலையில் கடந்த வருடம் திவ்யா தனது கணவரான அர்னாவ் மீது புகாரளித்துள்ளார். அந்த புகாரில், " நான் கற்பமாக இருக்கிறேன் இந்த சூழ்நிலையில் என் கணவர் வேறொரு நடிகையுடன் சேர்ந்து என்னை கொடுமை படுத்துகிறார்" என்று கூறியிருந்தார். இதனால் இவர் கணவரை காவல்துறை விசாரித்து கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்தது.
இதன்படி, தற்போது சீரியல் நடிகையான திவ்யா ஒரு பேட்டியில், "கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நேரத்தில் டெலிவரி ஆக சில நாட்களே ஆகும் நிலையில் இப்போதும் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். நான்காவது மாதமே நடிப்பதில் ப்ரேக் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கணவர் இல்லாத சூழ்நிலையில் இந்த குழந்தை வேண்டாம் என்று நண்பர்கள் அறிவுறுத்தினர். என் விருப்பத்தின்படியே இந்த குழந்தையை பெற்று வளர்க்க போகிறேன் என்று கண்ணீருடன் பேட்டியளித்தார்.