பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா.. சுந்தரி சீரியல் நடிகைதானா இது! அடையாளமே தெரியாம வேற லெவலில் இருக்காரே! ஷாக்கான நெட்டிசன்கள்!!
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வாறு தற்போது கிராமத்து பெண்ணின் கதையை மையமாக கொண்டு மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி.
இந்த தொடரில் சுந்தரி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லுஸ். இவர் பல்வேறு சமூக கருத்துக்களுடன் ஏராளமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அவர் 20 க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கேப்ரில்லா நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா, செத்தும் ஆயிரம் பொன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கேப்ரில்லா சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்க கூடியவர். அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது கொள்ளை அழகில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள், அட சுந்தரியா இது என ஷாக்காகியுள்ளனர்.