பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடடா.. இத நான் கனவுல கூட நினைச்சதில்லையே.. சுந்தரி நடிகைக்கு அடித்த பேரதிஷ்டம்!! அதுவும் யாருடன் பார்த்தீர்களா!!
சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அவ்வாறு தற்போது கிராமத்து கதையில் மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி.
இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லுஸ். திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், பல்வேறு விதவிதமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். மேலும் அவர் 20 க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கேப்ரியலா நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்திலும், செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் முப்பில்லா தமிழே தாயே என்ற பாடலுக்காக கேப்ரியல்லா தன்னுடன் பணியாற்றியுள்ளதாக அவருடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த கேப்ரியலா, நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம். ரொம்ப நன்றி ஏ.ஆர்.ரஹ்மான் சார். இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.