மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்ஸ்டார் ஆசையை தட்டிபறித்த கமலஹாசன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையை சொன்ன தயாரிப்பாளர்.?
கோலிவுட் திரையுலகில் 2015ஆம் வருடம் கமலஹாசன் நடிப்பில் வெளியான ' பாபநாசம்' திரைப்படம் மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது. ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும் 'த்ரிஷ்யம்' என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி மிகபெரிய ஹிட்டடித்தது. இதன் வெற்றியை தொடர்ந்தே இப்படத்தின் ரீமேக்காக 'பாபநாசம்' படம் உருவானது.
த்ரில்லர் கதைகளத்தை கொண்ட இப்படம் தமிழிலும், மலையாளத்திலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இத்தகைய நிலையில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு தொலைக்காட்சி நிகழ்ச்சி பேட்டியில் இப்படத்தை பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் முதலில் ரஜினி நடிக்க ஆசைபட்டார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் என்னை தொலைபேசியில் அழைத்து 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கை நாம் பண்ணலாம் என்று கூறினார். ஆனால் அப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி முன்பாகவே வாங்கிவிட்டார் என்று கூறினேன் என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து தான் கலைபுலி எஸ்.தானுவும் ரஜினிகாந்த்தும் இணைந்து கபாலி திரைபடம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.