திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சூர்யா, கார்த்தியா இது! சின்னவயசில் எப்படி இருக்கிறாங்க பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சிவகுமார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி.
இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து சிறந்த நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர். மேலும் இவரது படங்களுக்கே பெரும் ரசிகர்கூட்டம் உள்ளது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த என்.ஜி.கே மற்றும் காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் அவர் தற்போது சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து தம்பி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக இருக்கும் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் சிறுவயதிலேயே எவ்வளவு க்யூட்டாக உள்ளார்கள் என புகழ்ந்து வருகின்றனர்.