பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாணி ராணி சீரியல் நடிகையை தொடர்ந்து, அவரது சீரியல் கதாநாயகருக்கும் கொரோனா உறுதி! வெளியான அதிர்ச்சி தகவல்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல நடிகை நவ்யா சாமி. தெலுங்கு சீரியல்களில் மிகவும் பிரபலமான இவர் தமிழில் அரண்மனை கிளி மற்றும் ரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் தற்போது தெலுங்கில் ஆமே கதா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நவ்யா சாமியுடன் ஆமே கதா தொடரில் நடித்து வரும் நடிகர் ரவிகிருஷ்ணாவிற்கும் சமீபத்தில் கொரோனா
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே நான் என்னை தனிமைபடுத்திக்கொண்டேன். உங்களது பிரார்த்தனையால் நான் தற்போது நலமாக உள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள். மேலும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் மக்கள் எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகி, நல்ல மனநலத்துடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்