மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல பேன்ஸ் தல பேன்ஸ்தான்! சர்காருக்காக தல பேன்ஸ் என்ன பண்ணிருக்காங்க பாருங்க!
தமிழ் சினிமாவில் இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவர்க்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவர்கள் படம் வெளியாகப்போகிறது என்றாலே தங்களது கெத்தை காட்ட வித விதமாக போஸ்டர், பேனர்கள் வைப்பது வழக்கம்.
மேலும் விஜய் படம் வந்தால் அதை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும், அஜித் படம் வந்தால் அதை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் வழக்கம். இந்நிலையில் AR முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாகுகிறது சர்க்கார் திரைப்படம்.
படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் தளபதியின் சர்க்கார் படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்றும், படம் வைரவிழா காணவேண்டும் என்றும் வாழ்த்தி தளபதியின் சர்க்காருக்கு பேனர் அடித்துள்ளனர் தல ரசிகர்கள்.
ஒருபுறம் சில ரசிகர்கள் அடித்துக்கொண்டாலும், மற்றொருபுறம் இதுபோன்று ரசிகர்கள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயம் தான்.